” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு நாம் எதிர்ப்பு. தவறை யார் செய்தாலும் அது தவறுதான். அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
அதேபோல தொழிற்சங்கங்களும் எமது நிலைப்பாட்டிலேயே உள்ளன. எனவே, இரு தரப்புகளும் இணைந்து சமாந்தரமாக போராடுவது பற்றி பரீசிலிக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சி செய்த விடயம் தவறெனில் அதனை நாம் செய்யும்போது அது சரியாகிவிடாது. தவறை யார் செய்தாலும் தவறுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment