9 9
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் மாளிகைகள் : அமைச்சரவை அளித்துள்ள அங்கீகாரம்

Share

முன்னாள் ஜனாதிபதிகளின் மாளிகைகள் : அமைச்சரவை அளித்துள்ள அங்கீகாரம்

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாளிகைகளை, பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பொதுநிர்வாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஆகியோர் முன்வைத்த ஒருங்கிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில். அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் கீழ் கொழும்பு 07 மற்றும் 05 பகுதிகளில் காணப்படும் 50 அரச மாளிகைகள் இதில் அடங்குகின்றன.

அத்தோடு, ஜனாதிபதி அலுவலகத்தினால் நிர்வாகிக்கப்படும் கொழும்பு, கண்டி, நுவரெலியா, மஹியங்கனை, அநுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிபிட்டிய, மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகளும் அமைந்துள்ளன.

அவற்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் கண்டி, கொழும்பு ஜனாதிபதி மாளிகைகள் தவிர்ந்த ஏனைய மாளிகைகளும், தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் பல நாட்டின் தலைவர்கள் பலரும் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்திய கொழும்பு 02 இல் உள்ள விசும்பாய, பிரதமர் அலுவலகத்தின் கீழ் காணப்படும் நுவரெலியாவிலுள்ள பிரதமருக்கான உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட அரச மாளிகைகள் என்பன இவ்வாறு பொருளாதார ரீதியில் பயனுள்ளவையாக மாற்றப்படவுள்ளன.

இந்த அரச சொத்துக்களைப் பராமரிப்பதற்காக பெருமளவு நிதி செலவழிக்கப்பட்டுள்ள போதும் அவற்றினால் குறைவான பலனே ஈட்டப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...