0
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதியாளர்களுக்கு அநுர அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

வாகன இறக்குமதியாளர்களுக்கு அநுர அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் விளம்பரம் செய்த போதிலும், அவ்வாறான கூற்றுக்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுப்பாடுகளுடன் கூடிய வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்ற அதேவேளை, அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

“ஒரு அரசாங்கம் என்ற வகையில், வாகன இறக்குமதி தொடர்பான முடிவுகளை நாங்கள் கவனமாக அணுகுகிறோம், நமது இருப்பு மற்றும் நமது பொருளாதாரத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை எடுக்க நாங்கள் தயாராக இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

 

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...