ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் மோதல் எதுவும் இல்லை என்றபோதிலும் அத்தகையதோர் நிலைமையை தோற்றுவிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர்.
இன்று அரசுக்குள்தான் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. பங்காளிக்கட்சிகள் வெவ்வேறான வழிகளில் பயணிக்கின்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இணையலாம். அவர்களுடன் பயணிப்போம்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் கிடையாது. அவருடன் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை.” – என்றார் சரத் பொன்சேகா.
#SrilankaNews
Leave a comment