29 6
இலங்கைசெய்திகள்

அழியப்போகும் உலகம்: நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான கணிப்புகள்!

Share

அழியப்போகும் உலகம்: நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான கணிப்புகள்!

உலக அழிவுக்கான காரணங்கள் தொடர்பில் நிபுணர்கள் சில கணிப்புகளை முன்வைத்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக உலகின் அழிவு குறித்து பலர் தமது கணிப்புகளை முன்வைத்து வருகின்ற நிலையில், தற்போது நிபுணர்கள் தமது கணிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, அணு ஆயுதப்போர், விண்கற்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு என பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

இன்றைய சூழலில் அணு ஆயுதப்போர் உலகின் அழிவிற்கு காரணமாக இருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுதங்களின் வெடிப்புகள் உடனடி அழிவு மற்றும் பாரிய உயிர் இழப்பை ஏற்படுத்தும். நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பையும் உண்டாக்கும்.

மேலும் “Nuclear Winter” என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அதாவது, எரியும் நகரங்கள் மற்றும் காடுகளின் புகை சூரிய ஒளியைத் தடுக்கும். அதன் மூலம் உலக வெப்பநிலையைக் குறைக்கும்.

இது விவசாயத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் உலகம் முழுவதும் உணவுப்பற்றாக்குறை ஏற்படும். இதன் காரணமாக பஞ்சம் ஏற்படும். அத்துடன் கதிர்வீச்சினால் உடல்நலப் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பேரழிவை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய சிறுகோள் மோதியதால் டைனோசர்கள் அழிந்துவிட்டன என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த கோட்பாடும் உலக அழிவுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு விண்கல் மோதினால் பெரிய அளவில் ஆற்றல் வெளிப்படும். இதனால் உலகளாவிய அழிவு, தீ மற்றும் சுனாமிகளை ஏற்படுத்தும்.

அத்துடன் கடும் குளிர்கால விளைவு உருவாகும். இதனால் ஏற்படும் காலநிலை மாறுதலால், பூமியில் உள்ள பெரும்பாலான உயிர்கள் அழியக்கூடும்.

வானிலை மாற்றங்கள் காடுகளை அழித்தல் மற்றும் அதிக இரசாயன பயன்பாடு உள்ளிட்ட மனித நடவடிக்கையால் ஏற்படும் காலநிலை மாற்றம், பூமியில் உயிரினங்களுக்கு பாரிய ஆபத்து ஏற்படலாம்.

உலகின் வெப்பநிலை அதிகரிப்பால் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரும். மேலும் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால் பூமியின் சில பகுதிகள் உயிரினங்கள் வாழ முடியாததாக மாறும்.

இதேவேளை, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். சூறாவளி, வறட்சி மற்றும் வெப்ப அலைகள் போன்ற கடுமையான காலநிலை நிகழ்வுகளால் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மனித வாழ்க்கையின் பல அம்சங்களை செயற்கை நுண்ணறிவு எளிதாக்கும் என்ற கூற்றுடன் அறிமுகமான தொழில்நுட்பம், பின்னர் மனிதர்களை ஆபத்தில் தள்ளும் என்ற எச்சரிக்கை தகவல்களும் பரவின.

ஏனெனில் இயந்திரம் உருவாக்கும் ஆபத்துக்கள் மனித அறிவை விட அதிகமாக இருக்கும் என்பதால், AI அதன் கட்டுப்பாட்டை மீறலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இதன்மூலம் மனிதர்களை செயற்கை நுண்ணறிவு கட்டுப்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள்.

உலக கோடீஸ்வரர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூட AIயிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நிபுணர்களும் இதனை பரிந்துரைக்கின்றனர்.

ஒரு கோட்பாடு எரிமலை வெடிப்பும் உலகின் அழிவிற்கு காரணமாக இருக்கலாம் என கூறுகிறது. எரிமலைகள் பாரிய அளவில் மாக்மா, சாம்பல் மற்றும் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன.

சுமார் 74,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் உள்ள டோபா கால்டெராவில் வெடிப்பு ஏற்பட்டது.

இது கடைசியாக அறியப்பட்ட சூப்பர் எரிமலை வெடிப்பு என்று கூறப்படுகிறது. உலகளவில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி, நிகழ்வுகள் உலகத்தின் அழிவுக்கு காரணமாக அமையலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...