3 2
இலங்கைசெய்திகள்

நாட்டின் மின்சாரக் கட்டணம் திருத்தம் – வெளியான தகவல்

Share

நாட்டின் மின்சாரக் கட்டணம் திருத்தம் – வெளியான தகவல்

மின் கட்டணம் குறைப்பு சதவீதம் 35% முதல் 40% வரை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க (Sanjeewa Dhammika) தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த(01) நாட்டில் மொத்த மின்சாரத் தேவையில் 62.2% ஆன மின்சாரம் நீர் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் 35% முதல் 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

“தற்போதைக்கு, காலாண்டு முறையை எடுத்துக் கொண்டால், நான்காவது மின்சாரத் திருத்தத்தை நாம் அனுபவிக்க வேண்டும்.

ஆனால், அதை அனுபவிப்பதை காட்டிலும், இந்த அரசு இதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.

இந்த மின்சார சபைக்கு நியமிக்கப்பட்ட தலைவருக்கு மின் துறையில் ஒப்பந்த நிறுவனம் ஒன்று உள்ளது. மேலும் துணைத் தலைவருக்கும் மின் துறையில் ஒப்பந்த நிறுவனம் உள்ளது.

இப்படி இருக்கையில், மின் கட்டணம் குறையுமா?” எனவே, இம்முறை திருத்தத்தில், மின் கட்டணம் குறைப்பு சதவீதம் 35% முதல் 40% வரை வழங்கப்பட வேண்டும்.

ஏனென்றால் மின்சார சபை தற்போது 200 பில்லியனுக்கும் அதிகமான இலாபத்தைப் பெற்று வருகிறது,

Share
தொடர்புடையது
veppam 1
இலங்கை

வடக்கு கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’, இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில...

sri lankas president
இலங்கை

மீண்டும் சந்தித்த கோட்டா மற்றும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கொழும்பில்...

arested
இலங்கை

நகரசபை உறுப்பினர் கைது – காத்தான் குடியில் சம்பவம்.

  பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய...

hos
இலங்கை

பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களினையும் மூடுவது சிறந்தது – அவசரமாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை.

மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ ஒரு...