13 22
இலங்கைசெய்திகள்

கனடாவுக்கு அனுப்புவதாக பாரிய மோசடியில் ஈடுபட்ட வைத்தியர்

Share

கனடாவுக்கு அனுப்புவதாக பாரிய மோசடியில் ஈடுபட்ட வைத்தியர்

கனடாவிற்கு பணிக்கு அனுப்புவதாக சுமார் ஏழு கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஆனந்த அபேரத்னவிற்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே மறுத்துள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் முன்வைத்த அறிக்கைக்கு அமைய பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபரான வைத்தியர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் பிணை வழங்குமாறு கோரிய போது, ​​மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் அனைத்தும் செலுத்தப்பட்டதன் பின்னர் பிணை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை விசாரணைப் பிரிவிற்கு வழங்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, சந்தேகநபரான வைத்தியரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீஆனி மனம்பேரி என்ற சட்டத்தரணியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி ஜகத் அபேநாயக்க நீதிமன்றில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...