2 32
ஏனையவை

ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

Share

ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினரும் நேற்று ஆட்சேபனைகளை வெளியிட்டு வருகின்றனர்.

ரவி கருணாநாயக்கவின் வீடு முற்றுகையிடப்பட வேண்டும் எனவும் இந்த முடிவை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் அச்சம் நிலவுவதால் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வஜிர அபேவர்தன நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பட்டமை ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாது.

அவரின் இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு முரணாகும் என்றும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...