corona scaled
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 666 பேரைப் பலியெடுத்த கொரோனா!!

Share

இந்தியாவில் நேற்று மட்டும் 666 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை 16 ஆயிரத்து 326 பேருக்கு நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலும் அதிக பாதிப்புக்கள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் கொரோனாத் தொற்றினால் பலர் உயிரிழந்திருந்தனர்.

தற்போது பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில், கொரோனாப் பாதிப்பு எண்ணிக்கை அங்கு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று ஒரு நாளில் 16 ஆயிரத்து 326 பேருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், கேரள மாநிலத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 361 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் தற்போது தொற்றுக்குள்ளான 1,73,728 பேர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 101.30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...