4 6
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கெடுபிடி அதிகம்

Share

அநுர அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கெடுபிடி அதிகம்

இந்த நாட்டில் ஜனாதிபதியோ அல்லது எந்தவொரு அமைச்சரோ பொதுச் சொத்தை தத்தமது விருப்பத்தின் படி பயன்படுத்த முடியாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயற்படவேண்டும். அரசியல்வாதி சட்டத்துக்குக் கீழ்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரிகமான சட்டத்தில் இருக்கவேண்டும்.

பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க வரியை முறையாக செலுத்தாமல் சுங்கச்சாவடியிலிருந்து ஓட்டிச் செல்லும் வாகனங்கள், சில வாகனங்களைப் பார்த்தால் அவை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கும். அதுதான் நம் நாட்டின் அரசியல் கலாசாரம்.

எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கின்றோம். நாம் அதை செய்கின்றோம்.

இந் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை தத்தமது விருப்பத்தின்படி பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட அரசியல் எமக்கு தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...