சா்வதேச நிதியத்தின் தலைமை பொறுப்பிலிருந்து கீதா கோபிநாத் விலகுவர் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கீதா கோபிநாத் சா்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைமை ஆலோசர் என்ற பதவியிலிருந்து விலகுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019ம் ஆண்டு தை மாதம் முதல் கீதா கோபிநாத் சா்வதேச நிதியத்தில் முதல் பெண் தலைமை ஆலோசராக பணியாற்றி வந்த நிலையில் வருகிறன வருடம் (2022) தை மாதம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் 49 வயதாகிய அவர் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவில் மீண்டும் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#world
Leave a comment