27 10
இலங்கைசெய்திகள்

இரவு நேரங்களில் பெண்களை அச்சுறுத்தி வந்த மர்ம கும்பல் கைது

Share

இரவு நேரங்களில் பெண்களை அச்சுறுத்தி வந்த மர்ம கும்பல் கைது

நாட்டின் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த இரண்டு பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

21 வயதுடைய இளைஞனும், போதைப்பொருளுக்கு அடிமையான அவனது சிறிய தந்தையுமே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் உள்ள பொருட்களை இந்த கும்பல் தொடர்ச்சியாக திருடிச்செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில், மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் கம்பஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பேரில் பல பொலிஸ் குழுக்களால் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கடந்த 6 நாட்களாக குறித்த இரு கொள்ளையர்களின் பயணம் தொடர்பிலான தேடலில் ஈடுபட்டிருந்த மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று (16) அதிகாலை இருவரையும் கைது செய்துள்ளனர்.

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச்செல்லும் போதே , அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இவர்கள் அவிசாவளை மற்றும் எஹலியகொட ஆகிய இடங்களிலும் இதே முறையில் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 97
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” – டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரான் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்குத்தானே விதித்துக்கொண்ட காலக்கெடு செவ்வாய்க்கிழமை நெருங்கிக்கொண்டிருந்த...

Untitled 96
உலகம்செய்திகள்

நிலவின் மறுபக்கத்திலிருந்து பூமி: ஆர்டெமிஸ் II விண்கலக் குழுவினரின் வரலாற்றுச் சாதனைப் புகைப்படம் வெளியீடு!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் சென்றுள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ (Artemis...

Untitled 95
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லக்விஜய மின் நிலைய நிலக்கரி கொள்முதல்: விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு!

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக லங்கா நிலக்கரி நிறுவனம் மேற்கொண்ட நிலக்கரி கொள்முதல் செயல்முறை குறித்தும்,...

Untitled 94
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு நெருக்கடி: மக்களுக்குப் பாரிய நிவாரணத் தொகுப்பை அறிவித்தார் ஜனாதிபதி அனுர!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில், நடந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால்...