சர்வதேச T20 போட்டிகளில் ஷகிப் அல் அசன் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச இருபது ஓவர் துடுப்பாட்ட தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையை வங்கதேச அணியின் வீரன் ஷகிப் அல் அசன் படைத்துள்ளார்.
T20உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.
இதுவரை காலமாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 107 இலக்குகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், ஷகிப் 108 இலக்குகளை சாய்த்து அச்சாதனையை முறியடித்தார்.
அத்தோடு T20உலகக்கோப்பை தொடர் தற்போது இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
Leave a comment