யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீசாலை, மடத்தடி பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வண்டியில் பயணித்த குறித்த இளைஞன் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய நிலையில், மீண்டும் காருடன் மோதியுள்ளார்.
விபத்தில், சாவகச்சேரி சங்கத்தனையைச் சேர்ந்த வரதன் நிடோஜன் (வயது-24) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Leave a comment