17 12
இலங்கைசெய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Share

புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு

புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன், பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளைய தினம் நடைபெறவுள்ளது.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களது பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில மாதங்களாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தனர். இனி மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

பரீட்சை எழுதிய பின், பரீட்சை வினாத்தாளை மீண்டும் மாணவர்களிடம் கொடுத்து, அவர்களை எழுத வைத்து, விடைகள் சரியாக உள்ளதா என சோதித்து பார்ப்பதில் பலனில்லை.

புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் வாழ்வில் சந்திக்கும் இடையூறுகளில் ஒன்று. வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கூறி அவர்களை பலப்படுத்த வேண்டும்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் மாணவர்கள் இழந்த தங்களது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்குங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...