33 2
இலங்கைசெய்திகள்

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் : வஜிர அபேவர்தன

Share

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் : வஜிர அபேவர்தன

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardhana) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று (03) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பானது தேர்தலை இலக்கு வைத்த செயற்பாடு அல்ல.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரச துறையைப் பலப்படுத்தியுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தல் சாதி, மதம் சார்ந்த தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதாக அன்றி உலகின் வலுவான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்பதால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...