மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை பயணத்துக்கும், மாகாணசபைத் தேர்தலுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. தேர்தலை நடத்துமாறு அவர் வலியுறுத்தவும் இல்லை. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு.
எனவே, தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும். அத்தேர்தலை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினராகிய நாமும் தயார்.” – என்றார்.
Leave a comment