பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, தனி விமானத்தில் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இவரை விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் அகியோர் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள சுப்ரமணியம் சுவாமி வருகை தந்துள்ளார்.
அத்துடன் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது நிறைவையொட்டி நடத்தப்படும் கருத்தரங்கொன்றிலும் அவர் உரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment