18 22
இலங்கைசெய்திகள்

கொழும்புக்கு ஒரே நாளில் வந்த சீன மற்றும் இந்திய போர்க்கப்பல்கள்

Share

கொழும்புக்கு ஒரே நாளில் வந்த சீன மற்றும் இந்திய போர்க்கப்பல்கள்

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள், முறையான விஜயத்தின் அடிப்படையில் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளன

ஹெ பெய் ( HE FEI), இ வுஸிசான்;(WUZHISHAN) மற்றும் க்ய்லியான்சான்(QILIANSHAN) ஆகிய கப்பல்களே கொழும்பில் நங்கூரமிட்டுள்ளன.

HE FEI என்பது 144.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரக் கப்பலாகும். இது 267 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

WUZHISHAN மற்றும் QILIANSHAN ஆகிய இரண்டும் 210-மீட்டர் நீளமுள்ள தரையிறங்கும் தளத்தை கொண்டுள்ளன.

அத்துடன் முறையே 872 மற்றும் 334 பணியாளர்களை கொண்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த போர்க்கப்பல்கள் ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்படவுள்ளன

இதேவேளை இன்று இந்தியாவின் ஐஎன்எஸ் மும்பாய் என்ற போர்க்கப்பலும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

Share
தொடர்புடையது
Colombo Hotel
இலங்கை

பட்டப்பகலில் நடத்தப்பட்ட கைவரிசை – போலி ஆசாமி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!

கடந்த 3 ஆம் திகதி, கொழும்பு – கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு...

Cid Investigations 1
இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் – தலையிடுகிறதா CID!

அண்மைய நாட்களாக மிகப்பெரிய அளவிலான பேசுபொருளாக காணப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை...

எஃப்.யூ. வூட்லர்
இலங்கை

வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகனங்களினை அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை...

Pallegama Hemaratne Thero
இலங்கை

நீதிமன்றத்தில் முன்னிலையான தேரர்!

இன்றைய தினம், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம்...