24 66c9dee288d74
இலங்கை

கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் தமிழ் பொது வேட்பாளர்

Share

கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் தமிழ் பொது வேட்பாளர்

யாழ் மாவட்டக் கூட்டுறவு அமைப்புகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனிற்கும் (P. Arianetheran) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (24) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரன் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக யாழ் மாவட்டக் கூட்டுறவு அமைப்புகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சமூக அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன் (K. Arundhavapalan) தமிழ் மக்கள் பொதுச் சபையைச் சார்ந்த நிலாந்தன் (Nilanthan) ஆகியோரும் கலந்துகொண்டு தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...