23 8
இலங்கைசெய்திகள்

சஜித்துடன் இணைந்த மற்றுமொரு மொட்டுக்கட்சி உறுப்பினர்

Share

சஜித்துடன் இணைந்த மற்றுமொரு மொட்டுக்கட்சி உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு (Karuna Kodithuwakku) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(SLLP) மாத்தறை(Matara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்க தீர்மானித்துள்ளார்.

இதன் பிரகாரம், இன்று(17) மாத்தறை அகுரெஸ்ஸ நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் மூன்றாவது பேரணியில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இதேவேளை, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் (Mangala Samaraweera) சகோதரியின் மகளான சஞ்சல குணவர்தன (Sansala Gunawardana) ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்து கொண்டார்.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் கட்சித்தாவல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...