22 8
இலங்கைசெய்திகள்

யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்: மூவர் கைது

Share

யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்: மூவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) – வல்வெட்டித்துறையில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்தச் சம்பவத்தினால், மூன்று இலட்சம் வரையான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணையின் போது துபாயில் இருந்து வீட்டை தாக்க உத்தரவு கிடைத்ததாகவும் அதற்கமைய கூலிப்படையாக குறித்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சந்தேக நபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...