24 66bfcc8f935cc
உலகம்

அமேசான் வனப்பகுதியில் வெடித்து சிதறிய விமானம்: 5 பேர் பலி

Share

அமேசான் வனப்பகுதியில் வெடித்து சிதறிய விமானம்: 5 பேர் பலி

அமேசான் வனப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து வெடித்து சிதறிய சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் (Brazil) நாட்டின் மடோ கிராஸ்ரோ மாகாணம் அமேசானியன் நகரில் இருந்து ராண்டனொபொலிஸ் நகருக்கு கடந்த (15) திகதி புறப்பட்ட சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் அமேசன் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...

iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...