இந்தியா தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம், காலநிலை குறித்த இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல இடங்களில் தொடர் மழை பெய்துவந்த நிலையில், இந்த வாரமும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment