24 669b499c78cb4
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வு: ராஜபக்சர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வு: ராஜபக்சர்கள் தொடர்பில் எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவுள்ள தற்போதைய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் அவர்களின் தேர்தல் தொடர்பான நிலைப்பாடானது தற்போது வெளிப்படையான அரசியல் மோதலுக்கு இட்டுச்சென்றுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடைமுறையானது ராஜபக்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பிளவை விரிவுபடுத்தும் சாத்தியம் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் 22ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை வெளியிட்டதன் பின்னர் அரசியல் அரங்கில் பெரும் கேள்வி நிலைகள் தோன்றியுள்ளன.

இதன் பின்னணியிலேயே இவ்வாறான எச்சரிக்கையை அரசியல் ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.

ரணிலின் இந்த நடவடிக்கையானது அவரது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக பார்க்கப்படலாம் என ஒரு சாராரின் கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளது.

மேலும், ராஜபக்சர்களின் அரசியல் அபிலாஷைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், சர்ச்சைக்குரிய மற்றும் கணிக்க முடியாத தேர்தல் நகர்வுக்கு களம் அமைக்கும் எனவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...

Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...