9 6
இலங்கைசெய்திகள்

இளம் பட்டதாரி மாணவி திடீரென உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் காரணம்

Share

இளம் பட்டதாரி மாணவி திடீரென உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் காரணம்

கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப் நக்மா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தெல்தெனிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே. அபேரத்னவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையே இந்த மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த யுவதியின் தந்தை மகள் குறித்து தெரிவிக்கையில், “எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார். அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பட்டப்படிப்பை முடித்து கிராம அதிகாரி பரீட்சையில் தோற்றி கிராம அதிகாரி பரீட்சையில் சித்தியடைந்து மெடதும்பர பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவள் பயிற்சியின் போது மிகவும் கஷ்டப்பட்டு படித்தாள் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...