24 66893e09b964c
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களை ஏமாற்றும் எதிர்கட்சியினர்: மனுஷ எம்.பி குற்றச்சாட்டு

Share

நாட்டு மக்களை ஏமாற்றும் எதிர்கட்சியினர்: மனுஷ எம்.பி குற்றச்சாட்டு

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி – ஹக்மன டெனி அபேவிக்ரம விளையாட்டரங்கில் நேற்றுநடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவை நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்.

 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

 

“நாங்கள் வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவிக்கின்றனர் .

 

எங்கள் கடன்கள் டொலர்களில் கூறப்படும்போது கடன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.

 

ஊட்டச்சத்து குறைபாடு நல்லதா கெட்டதா என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார். இந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் பெற்றோர் வெளிநாடு சென்று பணம் அனுப்புகின்றனர்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த குழந்தைகளை நேசிப்பதால் ஆறுதல் மற்றும் சோறு கொடுக்கிறார். நாட்டின் துரதிர்ஷ்டங்களை மாற்றி நல்லவர்களாக மாற்ற முயற்சிக்கிறோம்.

 

எமது பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிய போது, ராஜபக்சர்கள் திருடுவார்கள் அனுப்ப வேண்டாம் என ஜேவிபியினர் கூறினார்கள் . ஆனால் அப்பெற்றோர்கள் அதை நம்பாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் நாட்டின் மீதுள்ள அன்பினால் 12 பில்லியன் டொலர்ககளை இந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அதனால்தான் இந்நாட்டு மக்கள் மீண்டும் உணவும் பானமும் பெற முடிந்தது” என்றார்.

Share
தொடர்புடையது
Crime
இலங்கை

கத்தியுடன் காவல் நிலையத்தினுள் புகுந்த நபர் – பரபரப்பு வாக்குமூலம

மாற்றுத்திறனாளியான தனது சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ...

Smartraveller
இலங்கை

இலங்கை பயணிகளுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாக்கு இடையே பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சுற்றுலாத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள்...

bus driver
இலங்கை

கடமை நேரத்தில் உயிரிழந்த சாரதி – யாழில் அதிர்ச்சி சம்பவம்.

நேற்று யாழில், புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ள தனியார் பேருந்தை செலுத்தியவாறே சாரதி ஒருவர்...

கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...