ee scaled
இலங்கைசெய்திகள்

சீனாவில் இருந்து திரும்பிய மகிந்த வெளியிட்ட தகவல்

Share

சீனாவில் இருந்து திரும்பிய மகிந்த வெளியிட்ட தகவல்

மக்களிடமிருந்து தலைவர்கள் பிறக்கிறார்கள் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்வைப்பீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுஜன பெரமுன இன்னும் வேட்பாளரை தெரிவு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற ‘சமாதான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகள் பிரகடனத்தின் 70வது ஆண்டு விழாவில்’ பங்கேற்றுவிட்டு, இலங்கை திரும்பும் போது, ​​மகிந்த ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 28ம் திகதி சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும் பேசிய மகிந்த ராஜபக்ச, சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் வான் யீ ஆகியோருடன் தாம் கலந்துரையாடியதாகவும், பேச்சுவார்த்தை வெற்றியளித்ததாகவும், சீன அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் நல்ல நிலைப்பாட்டுடன் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....