24 667f7cfe0ff26 24
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய கூட்டணியில் இணைந்தார் வியாழேந்திரன்

Share

சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய கூட்டணியில் இணைந்தார் வியாழேந்திரன்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன்(viyalendran) சிறி லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவின் ஏற்பாட்டில் “நாட்டை வெல்லுங்கள் – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் வெல்லவாயவில் நடைபெற்ற மக்கள் பேரணியிலேயே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் புதிய கூட்டணியில் இணைந்துகொண்டார்.

அத்துடன் தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கரவும் இந்த கூட்டணியில் இணைந்து கொண்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டமே இன்று (29) மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva), மகிந்த அமரவீர(Mahinda Amaraweera), லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna), துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake), ஜகத் புஷ்பகுமார (jagath Pushpakumara), அனுர பிரியதர்ஷன யாப்பா (Anura Priyadarshana Yapa), நிமல் லான்சா (Nimal Lanza), எஸ்.வியாழேந்திரன், ஜகத் பிரியங்கர (Jagath Priyankara,) உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மேயர்கள், பிராந்திய சபை உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பினர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

அவரது அரசியல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தொடங்கி பின்னர் மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவிற்கு மாறி தற்போது சுதந்திரகட்சியில் வந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...