30 1
இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க புதிய யோசனை

Share

சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க புதிய யோசனை

போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின்றி கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட சபை ஒன்றை நிறுவுவதற்கான சட்டங்களை விரைவில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதன்படி, பரந்த அளவிலான குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அடுத்த வாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த பணத்தின் மூலம் சொத்துக்களை கொள்வனவு செய்ததை உறுதிசெய்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி சொத்துக்களை கையகப்படுத்தும் அதிகாரம், இந்த உத்தேச அதிகார சபைக்கு இருக்கும் என அமைச்சர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகாரசபை எடுக்கும் முடிவுகளை சவால் செய்ய சட்ட விதிகள் இந்த சட்டத்தில் இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களை கைப்பற்ற பொலிஸார் அண்மைக்காலமாக எடுத்த முயற்சிகளை அடுத்து இந்த புதிய யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இவ்வாறான சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான பொறிமுறை இலங்கையில் இல்லை.

எனவே புதிய சட்டம், இந்தக் குறைபாடுகளை போக்குவதற்கு உதவும் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Couple Arrested
இலங்கை

மனைவியின் கனவு – போதைப்பொருள் கடத்திய கணவன்.

மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான...

Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...