2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு டாக்டர்களான டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுட்டியன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு வருடந்தோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.
நோபல் பரிசை பெற வேண்டும் என்பது மேற்குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களின் கனவாகவுள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு தொடர்பான அறிவிப்பு இன்று சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் அறிவிக்கப்பட்டது.
முதலில் மருத்துவ துறையில் சாதனை படைத்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
உடலை தொடாமல், வெப்பம், வலி, உடல் அழுத்தம் மற்றும் இதர விவரங்களைக் கண்டறியும் சென்சர் கருவியைக் கண்டுபிடித்த வைத்தியர்களான டேவிட் ஜூலியஸ் ஆர்டம் பட்டாஹவுட்டியன் இருவருக்கும் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
Leave a comment