கௌதம் மேனன், சாண்டி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள மூணு முப்பத்தி மூணு படம் வரும் 21ம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வித்தியாசமான தலைப்பு மற்றும் கதைக்கருவுடன் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
படத்தில் கௌதம் மேனனுடன் சாண்டி, சரவணன், ரமா, ரேஷ்மா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.
நம்பிக்கை சந்த்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் இசையமைத்துள்ளார்.படத்தின் டீசர் சில வாங்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் படம் உலகளவில் வரும் 21ம் திகதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு சிறப்பான திகில் அனுபவத்தை கொடுத்து தியேட்டர்களில் இந்தப் படம் கட்டிப்போடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
1 Comment