லண்டனில் பெண்களிடம் பாலியல் தாக்குதல் அல்லது அவர்கள் முன்னிலையில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட நபர் குறித்து பொலிஸார் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பெண்களிடம் குறித்த நபர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சைக்கிளை ஓட்டிக்கொண்டு, தான் குறிவைக்கும் பெண்களுக்கு பின்னால் வந்தே இச் செயலில் சந்தேகநபர் இச் செயலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் கருத்து வெளியிடுகையில்,
“பெரும்பாலான சம்பவங்கள் டவர் ஹெம்லெட்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி முதல் செப்டம்பர் 29ஆம் திகதி வரை இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
அதில் நான்கு முறை பெண்களுக்கு முன்னால் மிகவும் அருவருப்பான செயலில் ஈடுபட்டுள்ளார். குற்றவாளி கறுப்பு மற்றும் சாம்பல் நிறை சைக்கிளில் வந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a comment