24 6646a41d6dcc9
இலங்கைசெய்திகள்

இந்தியா – இலங்கை படகு சேவை மீண்டும் ஒத்திவைப்பு

Share

இந்தியா – இலங்கை படகு சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை மீண்டும் காலவரையின்றி தாமதமாகியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையே மே 13 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படிவிருந்த பயணிகள் படகுச் சேவை “தொழில்நுட்பக் குறைபாடு” காரணமாக தாமதமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் “தொழில்நுட்பக் குறைபாட்டின்” தன்மை அமைச்சரால் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, சீறற்ற வானிலை காரணமாக சில நாட்களுக்குப் முன்னர் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர், இந்தியா – இலங்கை கடல்சார் ஒத்துழைப்பின் முக்கிய அங்கமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது மூன்று முறை தாமதமானது.

காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்காக இந்தியா 63.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகம், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 104 கிலோமீட்டர் (56 கடல் மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...