24 66456eaae0fe7
இலங்கைசெய்திகள்

இந்தியாவின் போன்பே யுபிஐ கட்டண செயல்முறை இலங்கையில்

Share

இந்தியாவின் போன்பே யுபிஐ கட்டண செயல்முறை இலங்கையில்

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று(15.05.2024) நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினத்திலிருந்து லங்காபேயுடன் இணைந்து இலங்கையில் UPI கட்டணத்தை ஏற்றுக்கொள்வதைச் செயற்படுத்தியதாக PhonePe அறிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு வருகை தரும் தமது செயலி பயனர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள LankaPayQR வணிகர்கள் மூலம் UPIஐப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என்று போன்பே அறிவித்துள்ளது.

அத்துடன் PhonePe பயனர்கள் ரொக்கத்தை எடுத்துச் செல்லாமல் அல்லது நாணய மாற்றங்களைக் கணக்கிடாமல் பாதுகாப்பான மற்றும் விரைவான பணம் செலுத்த LankaPayQR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என்றும் PhonePe அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில், இந்தியாவின் உடனடி கட்டண தொழில்நுட்ப சேவையான யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI இலங்கை மற்றும் மொரீசியஸில் ஆரம்பிக்கப்பட்டது.

இது தொடர்பான காணொளி மாநாட்டு நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

UPI என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான வேகமான கட்டண முறையாகும். இது வாடிக்கையாளர் உருவாக்கிய விர்ச்சுவல் பேமென்ட் முகவரியை (VPA) பயன்படுத்தி 24 மணிநேரமும் உடனடியாக பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...