வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விரும்பிய வாகனங்களை நாட்டுக்கு கொண்டுவரும் போது, அவர்களுக்கு சலுகையொன்றை வழங்குவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வாகனங்களை கொண்டுவரும் போது அதற்காக அறவிடப்படும் வரிகளை டொலரில் செலுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவை நடைமுறைக்கு வரும் போது, நாட்டில் வாகனங்களின் விலை குறைவடையும் என்பதோடு, டொலர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி தான் முன்வைத்துள்ள யோசனைக்கு அனுமதி வழங்கும் என தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment