சேதன பசளை உற்பத்தி
இலங்கைசெய்திகள்

சேதனப்பசளை உற்பத்தி – விவசாயிகளுக்கு நிதி

Share

நாட்டில் சேதனப்பசளை உற்பத்திக்காக இதுவரை 4 லட்சத்து 81 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என விவசாய இராஜாங்க அமைச்சர் அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கால நிலை மாற்றத்துக்காக தீர்வு மற்றும் பசுமை பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இராஜாங்க அமைச்சு உபகுழுவின் மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், உர உற்பத்திக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற 12,500 ரூபா கொடுப்பனவுவில் 7500 ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் விவசாயிகளுக்கு 1000 மில்லியன் ரூபாவுக்கு அதிக தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு தேவையான சேதனப்பசளையை தட்டுப்பாடு இன்றி வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய களைநாசினிகளின் தட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...