24 663b0887bb813
இலங்கைசெய்திகள்

கொழும்பில் சினிமா பாணியில் பயங்கரம்! பணக்கார தந்தையின் மோசமான செயல்

Share

கொழும்பில் சினிமா பாணியில் பயங்கரம்! பணக்கார தந்தையின் மோசமான செயல்

கொழும்பில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளிற்கு தந்தையால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் வசித்து வந்த புதுமண தம்பதியினருக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாத வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

அங்கும் பல்வேறு அழுத்தங்களை தந்தையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடும் அழுத்தம் காரணமாக மீண்டும் இலங்கை திரும்பிய தம்பதி, கொழும்பில் வசித்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி பிற்பகல் பன்னிப்பிட்டியவில் உள்ள இளைஞனின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என அடையாளப்படுத்தியவர் வந்துள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த தாயின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டதாகவும், தாயாரை அச்சுறுத்தியதாகவும், அந்த இளைஞனின் புகைப்படங்கள் சிலவற்றை தமது அலைபேசிக்கு அனுப்பி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அன்று பிற்பகல், அந்த இளைஞனின் தந்தை, அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பின்னர், மகளின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் மூன்று அதிகாரிகளில் இருவர் ஹோட்டல் வளாகத்தில் மறைந்திருந்த நிலையில், மற்றைய நபர் காரில் தப்பிச் செல்லும்போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட குறித்த சந்தேகநபர் துறைமுகப் பணியாளர் எனவும், மற்றைய இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
Accident
இலங்கை

இளைஞரின் உயிர் பறித்த விபத்து – தப்பி சென்ற சாரதி கைது.

  சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை...

gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...