24 6630692460c33
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு கனடா ஆதரவு

Share

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு கனடா ஆதரவு

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கனடா (Canada) – பிராம்ப்டனில் உள்ள இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனை குறித்து, வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் மின்னஞ்சல் கேள்விக்கே கனேடிய உயர்ஸ்தானிகரகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.

முன்னதாக, கனேடிய நகரமான பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைத்து தமது அதிருப்தியை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்தே கனேடிய உயர்ஸ்தானிகரகத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கனடாவின் கூட்டாட்சி அமைப்பின் கீழ், மாகாண மற்றும் நகராட்சி அரசாங்கங்கள், குறிப்பிட்ட அதிகார வரம்பைக் கொண்ட மத்திய அரசிடமிருந்து சுயாதீனமாக செயற்படுவதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம், வெளிநாட்டுக்கு ஊடகத்துக்கான தமது மின்னஞ்சல் பதிலில் தெரிவித்துள்ளது.

தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிராம்ப்டன் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு இலங்கை அதிகாரிகளால் இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதன் பின்னரே பிரம்டனில் நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது.

Share
தொடர்புடையது
Gotabaya Rajapaksa 2
இலங்கை

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டாபய ராஜபக்ச.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...

Deshabandhu Tennakoon
இலங்கை

அரகலய வழக்கு தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது, அனுருத்த பண்டார என்ற இளம் சமூக...

mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...