24 6625261118bd5
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பயங்கரவாதம் குறித்து இந்தியா கண்டனம்

Share

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பயங்கரவாதம் குறித்து இந்தியா கண்டனம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில்(Easter attack sri lanka), உயிரிழந்த அனைத்து உயிர்களையும் இலங்கை நினைவுகூரும் நிலையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் கண்டிப்பதாக இந்தியா(India) கூறியுள்ளது.

குறித்த விடயத்தினை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் (High Commission of India) தனது உத்தியோகபூர்வ எக்ஸ்(X) தளத்தில் பதிவிட்டுள்ளது.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடனும் இலங்கை மக்களுடனும் இந்தியா ஒத்துழைப்புடன் நிற்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா(Santhosh Jha), 2019 ஆம் ஆண்டில் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற தளங்களில் ஒன்றான புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று (21.04. 2024) நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கை மக்களுக்கு, ஒத்துழைப்பை வெளிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு குறுகிய பயணமாக கொழும்புக்கு பயணித்தார்.

தனது பயணத்தின் போது, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, நாட்டின் தலைநகரில் உள்ள நாட்டின் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...