2 scaled
சினிமாசெய்திகள்

வெளிவந்து 25 வருடங்கள் ஆகும் இண்டஸ்ட்ரி ஹிட் படையப்பா படத்தின் மொத்த வசூல்.. இதோ பாருங்க

Share

வெளிவந்து 25 வருடங்கள் ஆகும் இண்டஸ்ட்ரி ஹிட் படையப்பா படத்தின் மொத்த வசூல்.. இதோ பாருங்க

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இவர்கள் அனைவரையும் தாண்டி நடிகர் திலகன் சிவாஜி கணேசன் இப்படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அதுவும் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வரும் காட்சிகளில் எல்லாம் அவரை தவிர வேறு யாராலும் நடிக்கவே முடியாது. மிகவும் எமோஷனலாக நடித்திருப்பார்.

மேலும் இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். ரஜினிக்கான ஹீரோ பிஜிஎம், வில்லி ரம்யா கிருஷ்ணனுக்கான பிஜிஎம் என பின்னணி இசையில் கலக்கி இருப்பார். அதுமட்டுமின்றி மின்சார பூவே, எம் பேரு படையப்பா, சுத்தி சுத்தி வந்தீங்க, வெற்றி கொடி கட்டு ஆகிய பாடல்கள் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இன்றைய தமிழ் சினிமாவில் எப்படி ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக கொண்டாடப்படுகிறதோ, அதே போல் அன்றைய காலகட்டத்தில் படையப்பா திரைப்படம் தான் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக கொண்டாடப்பட்டது.

இன்றுடன் படையப்பா திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், 90 களில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக கொண்டாடப்பட்ட படையப்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 61 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...