செய்திகள்
பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைப்பு!
சிகரெட்டிக்கான வரியை அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய இக்கடிதம் நேற்றய தினம் அனுப்பப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டிற்கான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது என்ற கேள்வியும் கடிதத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் கடிதத்தில், ஒரு சிகரெட்டின் விலையை 20.00 ரூபாவினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயை இழக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை சிகரெட் பயன்பாட்டிற்கு அடிமையாகி காணப்படுவதால் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.
எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login