உலகம்
முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா
முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா
இந்தியா, மாலைதீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு அந்நாட்டு அமைச்சர் ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.
மாலைதீவுக்கு அதிபராக முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
மாலைதீவு அதிபர் முய்சு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பதால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து அவர் மேற்கொண்டு வந்தார்.
அத்தோடு, மாலைதீவு அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடி விமர்சித்து பேசியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், மோதல் போக்கு நிலவி வந்தாலும் மாலைதீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
அதன்போது, சர்க்கரை, கோதுமை, அரிசி , வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாலைதீவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக சரியான நேரத்தில் மாலைதீவுக்கு இந்தியா இந்த உதவியை செய்தமையால் தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.