24 66063236ec41f
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா மோசடி

Share

இலங்கை முழுவதும் மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா மோசடி

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உணவுப்பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதாக நடித்து ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடியான முறையில் 50 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரஸ்ஸன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் தலத்துஓயா பொலிஸ் பிரிவில் பதுங்கியிருப்பதாக கடுகன்னாவ பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் கண்டி, வலப்பனை மற்றும் கடுகன்னாவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் பணத்தை மோசடி செய்துள்ளார்.

கொழும்பில் இருந்து பொருட்களை லொறிகளுக்கு ஏற்றும் வழியில், குறித்த நபர் பொருட்களை திருடுவதாகவும் மேலும் இந்த பொருட்களில் உரங்கள், சீனி, மா, பருப்பு மற்றும் அரிசி ஆகியவை அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

கடுகன்னாவ பொலிஸாரால் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீநாத் விஜேசேகர உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
1760925917 DIWALI 6
செய்திகள்இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் தனது அன்பான தீபாவளி வாழ்த்துக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

Sri Lanka vote polls f7e68bf67c9e707d0d548795e0b5e2cb
செய்திகள்இலங்கை

தேர்தல் வேட்பாளர்கள் மீது வழக்கு: ஆணைக்குழுவிடம் பொலிஸ் அறிவிப்பு

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத 2,000 இற்கும் அதிகமான...

image ba58952b48
செய்திகள்இலங்கை

யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனசீவராசிகள் மற்றும்...

1752392456 Ishara
செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பு! இளைய சகோதரர் பிணையில் விடுதலை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை அடுத்துத் தப்பியோடிய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாயார்...