24 6602288c6a7b0
இலங்கைசெய்திகள்

உண்மையை மறைக்கும் அரசாங்கம்: டொலர் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது

Share

உண்மையை மறைக்கும் அரசாங்கம்: டொலர் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது

நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வருவதால் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி 325 ரூபாவாக இருந்த டொலர், மார்ச் 22 ஆம் திகதி 303 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறு டொலர் வீழ்ச்சியடைவதற்கு பதிலளித்த அரசாங்கம், பொருளாதாரம் வலுவடைவதால் டொலர் வீழ்ச்சியடைகின்றதாக கூறி உண்மையை மறைக்கின்றது.

பொருளாதாரத்தின் படி, டொலரின் மதிப்பு வீழ்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.முதல் காரணம், ஏற்றுமதி வருமானம், சுற்றுலா வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணவரவு அதிகரிப்பு ஆகும்.

இரண்டாவது காரணம் இறக்குமதி குறைவதால் டொலருக்கான தேவை குறைகின்றது என்றும் விளக்கமளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...