tamilni 230 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகளின் அசமந்தபோக்கு

Share

வடக்கில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகளின் அசமந்தபோக்கு

வட பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இந்த பிரச்சனை நீண்டகாலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரச்சினையானது எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

எனவே இவ்விடம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...