train nnn
இலங்கைசெய்திகள்

ரயில் சேவை மீள ஆரம்பம்?

Share

பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்.

இதனை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக ரயில் சேவை முடக்க நிலையில் உள்ளதால் புகையிரதத் திணைக்களத்துக்கு 500 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எதிர்வரும் காலங்களில் மின்சார ரயில் சேவையை ஆரம்பிக்க திணைக்கள மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...

tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...