21 613ecfe6ac7bf
இலங்கைசெய்திகள்

கடும் கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடிவு

Share

எதிர்வரும் முதலாம் திகதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நாட்டை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ள நிலையில், வாராந்தம் இடம்பெறும் கொவிட் 19 செயலணிக் கூட்டம் நேற்று நடைபெறவில்லை.

கொவிட் –19 ஜனாதிபதி செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கூட ஆராய்ந்து முடிவு எடுக்கும். எனினும் இந்த வாரம் கூட்டம் இடம்பெறவில்லை.

இந்நிலையில், நாட்டை திறப்பது தொடர்பிலும் அதன் கட்டுப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொறுப்பானவர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாடு தொடர்ச்சியான மூடப்பட்டிருந்ததன் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராகம வைத்தியபீடத்தில் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி

  • அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 25 சதவீதத்தில் பணியாளர்களை அழைப்பது மட்டுப்படுத்தவேண்டும்.

  • பொதுப் போக்குவரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது 50 சதவீதமாக இருக்க வேண்டும்

  • திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் நிகழ்வுகளை முழுமையான தடை செய்தல் வேண்டும்.

  • கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் 70–80 சதவீதங்களுக்கு அண்மித்திருக்க வேண்டும்.

  • போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதம் திருப்தியடையும் வகையில் குறைவடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...