சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவியொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் சுவேதா எனும் 25 வயதுப்பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் .
தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக படித்துவரும் இவர் ரயில் நிலையத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த வேளையில் இளைஞர் ஒருவர் இவரை கத்தியால் குத்திவிட்டு பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
படுகாயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இளைஞருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காதல் விவகாரமாக இருக்கலாமோ எனும் கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கடந்த 2016ஆம் ஆண்டு மென்பொருள் துறையில் பணியாற்றிய சுவாதி எனும் இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டது.
அதில் குற்றவாளியான ராம்குமார் என்பவர் கைதாகி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் .
இந்நிலையில் மீண்டும் இது போன்றதொரு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Leave a comment