tamilni 375 scaled
இலங்கைசெய்திகள்

தேர்தல்களைப் பிற்போட திட்டமிடும் அரசாங்கம்

Share

தேர்தல்களைப் பிற்போட திட்டமிடும் அரசாங்கம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தேர்தல்களைப் பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார்.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாயின் அதற்கு முன் 13 திருத்த சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இது தொடர்பில், பரந்துபட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், துரித கதியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதினை மேற்கொள்ள இடமளிக்க முடியாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்தோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகத் தெரிவித்து தேர்தல்களைப் பிற்போடும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க உத்தேசிக்குமாயின் நாட்டில் பாரிய கிளர்ச்சியொன்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...